நோய் விடுப்பு

சம்பளம் செலுத்தப்பட்ட நோய் விடுமுறை

கடை மற்றும் அலுவலக சட்டத்தின் பிரகாரம்  ஒரு மருத்துவரால் சான்றுப்படுத்தப்பட்ட ஒவ்வொரு பணியாளரும் 12 மாத காலப்பகுதியில் 7 நாட்களுக்கு தமது தனிப்பட்ட அலுவல்கள் அல்லது நோய் வேறு ஏதும் நியாயமான காரணங்களுக்காக சம்பளம் செலுத்தப்பட்ட நோய் விடுப்புக்கு உரித்துடையோராய் உள்ளனர். இவர்கள் பொதுவாக சாதாரண விடுமுறைகள் என அறியப்படுகின்றன. சாதாரண விடுமுறைகளானவை ஒரே நேரத்தில் அரைநாளில்  இருந்து அல்லது ஒன்று அல்லது மேற்பட்ட நாட்களாக அமைந்துள்ளன. இது நீண்ட நோய் விடயங்களை உள்ளடக்க மாட்டாது.

நோய் காரணமான மருத்துவ விடுப்புக்களுக்கான விசேடித்த ஏற்பாடுகளை பயிற்சியாளர்கள் வேலைவாய்ப்பு தனியார்துறை சட்டம் கொண்டுள்ளது. பயிற்சியாளர் ஆனவர் நோய் நிமித்தம் அவருக்கு செலுத்தக்கூடிய முழு கொடுப்பனவு ஒரு காலப்பகுதிக்கு அல்லது காலப்பகுதியின் பெருக்கங்களுக்கு பதிவுசெய்யப்பட்ட செய்யப்பட்ட மருத்துவ அதிகாரியினால் வழங்கப்பட்ட மருத்துவ சான்றிதழ்களால் ஆதரவு அளிக்கப்படும் விடுப்புக்கள் விண்ணப்பிக்கப்படும்பொழுது 7 நாள் நோய் விடுப்புக்கு உரித்துடையவராகிறார்.

மூலம்: கடை மற்றும் அலுவலகப் பணியாளர்கள் சட்டம் §6(3 & 4); பயிற்சியாளர்களின் வேலைவாய்ப்பு தனியார்துறை சட்டம் §6

மருத்துவ கவனம்

அனைத்துக் குடிமக்களுக்கும் மருத்துவப் பலன்கள் இலவசமாகக் கிடைக்கின்றன. "Shramasuwa Rekawarana" மருத்துவமனையகப்படுத்தல் மருத்துவ திட்டத்தின் மூலமாக மருத்துவப் பலன்களை உபயோகித்துக்கொள்ள உறுப்பினர்கள் தகுதியடைகிறார்கள். பணியமர்த்துபவரானவர் மாதம்தோறும் ஒவ்வொரு பணியாளரின் சம்பாத்தியத்தின்  3% தொகையை, அடுத்து வரும் மாதத்தின்  கடைசி பணி நாளுக்கு முன்பாகவே "பணியாளர் நம்பிக்கை நிதிக்கு" செலுத்திவிட வேண்டும் என பணியாளர் நம்பிக்கை நிதி சட்டம் கோருகிறது, இது மேற்கண்ட பல்வேறு பலன்களை உறுப்பினர்கள் அடைவதற்காகவேயாகும்.

மருத்துவமனையகப்படுத்தல் திட்டமானது மருத்துவமனையகப்படுத்தல் செலவுகளை திரும்பப் பெற்றுக்கொள்ள உறுப்பினர்களுக்கு உதவுகிறது. திட்டத்திற்கு பொருத்தமான நிபந்தனைகளுக்கு உட்பட்டு (பங்களிப்புக்கள் குறைந்தது 5 ஆண்டுகளுக்கு செலுத்தப்பட்டிருக்க வேண்டும்), ஆண்டு ஒன்றுக்கு 25,000 ரூபாய்க்கு (பணியமர்வுக் காலத்திற்கான அதிகபட்ச தொகை: 50,000 ரூபாய்) உட்பட்டு இருந்தால் உறுப்பினர்கள் இந்தச் செலவுகளைக் கோரிப்பெறத் தகுதியடைவார்கள்.

ஆதாரம்: ISSA Country Profile; http://www.etfb.lk/sub_pgs/ben_statutory_eligibility.html

நோயின்பொழுது வேலைப்பாதுகாப்பு

7 நாட்கள் விடுமுறையில் நிற்கும்பொழுது பணியாளரின் வேலைவாய்ப்பானது அக்காலப்பகுதியில் பாதுகாக்கப்படுகிறது.

மூலம்: கடைகள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் சட்டம் §6(5)

Cite this page © WageIndicator 2017 - Salary.lk - நோய் விடுப்பு